இக்கொள்கை மற்றும் விதிமுறைகள், 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்னணு பதிவுகள் விதிகளுக்கிணங்க, மின்னணு ஆவணமாக வெளியிடப்படுகிறது. இது கணினி அமைப்பினால் உருவாக்கப்பட்டதாலே, உடல் கையொப்பம் அல்லது டிஜிட்டல் கையொப்பம் தேவையில்லை.
tnmtrustmatrimony.com என்பது முக்குலத்தோர் (மறவர், கள்ளர், அகமுடையார்) சமூகத்தினருக்கு உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான திருமண தகவல் மையம். இது முழுமையாக ஒரு சமூக சேவை நோக்கில் இயங்கும் அமைப்பாகும், இலாப நோக்கமற்ற..
21வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே பதிவு செய்யலாம்.
பதிவு செய்யும் நபர் தனது மற்றும் தன் குடும்பத்தின் சார்பாக பதிவு செய்கிறார் என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பதிவு செய்யும் தகவல்கள் உண்மையானவை மற்றும் சரியானவை இருக்க வேண்டும்.
பதிவுக்கான குறைந்த கட்டணம் ₹600/- மட்டும். இது இணையதள பராமரிப்பு செலவுக்காக பயன்படுத்தப்படும்.
உங்கள் OTP, கடவுச்சொல் போன்ற உள்நுழைவு விபரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
உங்கள் கணக்கில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு உங்களுக்கே.
உங்கள் ஜாதகம் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் தகவல்கள் பகிர படாது.
இந்த நிபந்தனைகள் பற்றி மேலும் அறிய, தனியுரிமைக் கொள்கை ஆவணத்தை படிக்கவும்.
tnmtrustmatrimony.com உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய உதவும் ஒரு மேடையை மட்டுமே வழங்குகிறது.
எந்த ஒரு தகவலின் அடிப்படையில் நடக்கும் திருமணத்திற்கு tnmtrustmatrimony எந்த ஒரு சட்டப் பொறுப்பையும் இணையதளத்தில் ஏற்பதில்லை.
பயனர்கள் மரியாதையுடன் மற்றும் சமூக ஒழுங்குகளுக்கிணங்க நடந்து கொள்ள வேண்டும்.
தவறான தகவல் வழங்குதல், பிறரை தவறாக வழிநடத்துதல் அல்லது அவதூறு செயற்பாடுகள் கண்டறியப்பட்டால், உறுப்பினர் ID நீக்கப்படும்.
அனைத்து கட்டணங்கள் ஒரு முறை கட்டணம் மட்டும்.
கட்டணம் திருப்பித் தரப்பட முடியாது.
வெளிநாட்டில் வசிக்கும் முக்குலத்தோர் சமூகத்தினர் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் வழங்கும் தகவல்களும், இந்திய சட்டங்களுக்கும் கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும்.
உங்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கை நீக்க முடியும்.
சில சட்டபூர்வ தேவைகளுக்காக உங்கள் கணக்கு தகவல்கள் சில மாதங்கள் பாதுகாக்கப்படும்.
tnmtrustmatrimony.com இல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.
மாற்றங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும், அதை பின்தொடர்வது உங்கள் பொறுப்பு.
இந்த இணையதளத்தை பயன்படுத்துவது இந்திய சட்டத்திற்கு உட்பட்டது.
தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை
டீச்சர்ஸ் காலனி, திருநகர்,
மதுரை – 625006
தொலைபேசி: +91-7305822774
மின்னஞ்சல்: tnmtrustmatrimony@gmail.com