Tnm Trust History

"தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை வரலாறு".

நிறுவனத்தின் தோற்றம்  - தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை முக்குலத்தோர் சமூகத்தின் (கள்ளர், மறவர், அகமுடையார்) திருமண தகவல் சேவையை தொடங்கி, கடந்த 44 பல ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வரும் நம்பிக்கையான சமூக அமைப்பாக திகழ்கிறது..

நிறுவனர் – திரு. க. கணபதித்தேவர் (1912) அவர்கள், 15.01.1912 அன்று விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே கல்வியை முடித்து, சென்னை அரசுப் பணியில் சேர்ந்தவர். ஆனால் தேசிய உணர்வால் ஊக்கமுற்று, அரசு வேலையைத் துறந்து இந்திப் பிரச்சார சபையில் "இந்தி பண்டிட்" பட்டம் பெற்று, ராமநாதபுரம் சமஸ்தானம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியராகப் பணியாற்றினார்..

அவர் ஒரு பன்முக அறிஞர் – தமிழ், ஆங்கிலம், சமய இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை கொண்டவர். காந்திய கொள்கைகளை முழுமையாக கடைபிடித்து , கதராடை, சைவ உணவு, நேர்மை வாழ்க்கை போன்றவற்றை நடைமுறையில் வாழ்ந்தவர்..

அவருடைய துணைவி திருமதி சாந்தா லெஷ்மி , ஏழை மாணவர்களுக்கு அன்னதானம் செய்த நற்பண்பு கொண்ட சமூக சேவையாளர்..

முக்கிய சமூக பணி –  திரு. கணபதித்தேவர் அவர்கள், மாணவர்களுக்கு கல்வி உதவி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் திருமண வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் தனிப்பட்ட முறையில் செய்திருந்தாலும், திருமண தகவல் சேவையை மட்டுமே தனி அமைப்பாக செயல்படுத்தும் யாரும் இல்லாததால், 1981ஆம் ஆண்டு "தேவர் நற்பணி மன்றம்" என்ற பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைப்பை தொடங்கினார்..

மதுரைக்கு மையம் மாற்றம் – (1986) முக்குலத்தோர் சமூகத்தின் கோரிக்கையின் பேரில்,1986 ஆம் ஆண்டு இந்த மன்றம் மதுரை திருநகருக்கு மாற்றப்பட்டது. இங்கு 12 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது, பெற்ற தகவல்களை ஆய்வு செய்து, வசதியற்ற குடும்பங்களுக்கு இலவச கூட்டுத் திருமணங்கள் செய்தது..

இச்சேவை பரவி, தமிழகமெங்கும் நம்பிக்கைக்குரிய சமூகத் தளமாக மாறியது.நிறுவனரான திரு. கணபதி தேவர் மூத்த மகன் திரு. காந்தி,பின் அதை சிறப்பாக வழிநடத்தினர். காலப் போக்கில், அமைப்பை சட்டபூர்வமாக பதிவு செய்து "தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை" என்ற பெயரில் மதுரையில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டது..